சென்னை, செப். 27 –
இன்று தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் தமிழ்நாடு தொழில் தடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்கள். என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு அரசின் புது தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே. விஜயன், தமிழ்நாடு அரசின் தொழில்துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தம், தமிழ்நாடு அரசு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் மேலாண்மை அயக்குநர் பங்கஜ் குமார் பன்சல், தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையாளர் 11 ஆசிஷ் சாட்டர்ஷி ஆகியோர் உடன் இருந்தனர் என அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.