கும்பகோணம், ஆக. 17 –
தமிழகத்தில் போதைப்பொருள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என வளரும் இளம் சமுதாயத்தினர் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவது அதிகரித்து வரும் நிலையில், அதனை தடுத்திடவும் ஒழித்திடவும் போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பேரணி கும்பகோணம் அரசுக் கலைக் கல்லூரி சார்பில் நடத்தப்பட்டது.
அப்பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக போதைப்பொருள் தீமை குறித்த வாசகங்கள் மற்றும் புகைப்படம் நிறைந்த பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டும் முழக்கங்களை எழுப்பியவாரும் சென்றனர்.
இந்த பேரணியை கல்லூரி முதல்வர் மீனாட்சிசுந்தரம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி கல்லூரியிலிருந்து புறப்பட்டு பாலக்கரை மடத்து தெரு உள்ளிட்ட முக்கிய வீதி வழியாக சென்று காந்தி பூங்காவில் நிறைவடைந்தது. இந்த பேரணியில், என் எஸ் எஸ், என் சி சி யைச்சேர்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.