திருவண்ணாமலை, செப்.8-
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களையும் முடிக்காணிக்கை செலுத்த கட்டணம் வசூலிக்கப்படாது என அமைச்சர் சேகர் பாபு தெரிவத்துள்ளார்.
இந்த நடைமுறை அனைத்து கோவில்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.. இந்நிலையில் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்கள் எனதினமும் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்கிறார்கள்.
கோவில் ராஜகோபுரம் அருகில் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்துமிடம் உள்ளது. அங்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் இதுவரை ரூ.10 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் முதல் அந்த கட்டணம் ரத்து செய்யப்பட்டது. முடிகாணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் அங்குள்ள கவுன்டரில் இலவச டோக்கனை பெற்றுக்கொண்டு முடிகாணிக்கை செலுத்தினர்.
மேலும் முடிகாணிக்கை செலுத்தவரும் பக்தர்களுக்கு ஏதும் வசூல் செய்யப்படுவதில்லை என்றும் அவ்வாறு வசூல் செய்தால் கோவில் நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும் கோவில் நிர்வாகம் சார்பில் முடிகாணிக்கை செலுத்தும் அருகில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதல் நாளான நேற்று முன்தினம் 110க்கும்,. நேற்றும் 100க்கும் மேற்பட்டோர் கட்டணமில்லா முடி காணிக்கை செலுத்தினர். இது கோயிலுக்கு முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்கள் இடையே நல் வரவேற்பைப் பெற்றுள்ளது.





















