திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை உட்கோட்டம் வெங்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திடீர் நகர் குருவாயல் கிராமத்தை சேர்ந்த நிர்மலா வயது 27 க/பெ ரவி என்பவர் ஊத்துக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தனது மகள் இந்துமதி வயது 9 த/பெ ரவி என்பவர் குருவாயல் அரசு தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருவதாகவும் 10.04.2017 அன்று தாம் வழக்கம்போல் கூலி வேலைக்காக சென்று விட்டதாகவும் தனது மகள் மட்டும் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருக்கும் போது அதே கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (எ) மானாவரி ஆனந்தன் வயது 50 என்பவர் தனது மகளை பாலியல் துன் புறுத்தலுக்கு ஆளாக்கி யதாகவும் அது சம்மந்தமாக வெளியில் தெரிவித்தால் தனது மகளை கொன்று விடுவதாக மிரட்டியதாக தெரிவித்ததின் அடிப்படையில் இது சம்மந்தமாக ஊத்துக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப் பட்டு, புலன் விசாரணை செய்தும் எதிரி ஆனந்தன் (எ) மானாவரி ஆனந்தன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி வழக்கின் புலன் விசாரணை முடித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் 05.05.2017ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கின் நீதிமன்ற வாதங்கள் முடிக்கப்பட்டு இன்று 25.02.2019 வழக்கில் எதிரி ஆனந்தன் (எ) மானாவரி ஆனந்தனுக்கு ஆயுள் கால சிறையுடன் கூடிய ஒருவருட கடுங்காவல் தண்டனையும் மேலும் ரூபாய் 10,000 ம் அபராதமாக விதித்து திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி .பரணிதரன் தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கில் அரசுதரப்பு வழக்கறிஞராக தனலட்சுமி ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்தார். எதிரி ஆனந்தன் (எ) மானாவரி ஆனந்தனை வழிக் காவல் மூலமாக புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
முகப்பு மாவட்டம் திருவள்ளூர் திருவள்ளூர் ஊத்துக்கோட்டை அருகே 9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த முதியவருக்கு ஆயுள்தண்டனை