பாபநாசம், மே. 11 –

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருவைக்காவூர் ஊராட்சியில், நீர்வளத்துறை சார்பில் மண்ணியாற்றில் 5 கிலோமீட்டர் அளவில் ரூ15.5 லட்சம் மதிப்பீட்டிலும், மண்ணியாற்றில் இருந்து பிரிந்து வரும் நீலத்தநல்லூர் பாசன வாய்க்காலில் 5 கிலோமீட்டர் அளவில் ரூ 5.7 லட்சம் மதிப்பீட்டிலும், தூர்வாரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது அவர் பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இவ்வாய்வின் போது, நீர்வளத்துறை செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் ராஜதேவி , கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், பனி ஆய்வாளர் முருகன், பாசன உதவியாளர்கள் ராமலிங்கம் , பாலாஜி பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய் துறை ஊழியர்கள் உள்ளிட்டவர்களும்  உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here