கும்பகோணம், ஜன. 27 –

கும்பகோணம் அருகே திருமண்டங்குடியில் தனியாருக்கு சொந்தமான திருஆரூரான் என்ற சர்க்கரை ஆலை இயங்கி வந்தது.  இந்த நிலையில் அந்த ஆலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நஷ்டத்தை காரணம் காட்டி மூடப்பட்டது.

அதனால், அவ்வாலையில்  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அரவைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையான ரூபாய் நூறு கோடியை இதுவரை அந்த ஆலை நிர்வாகம் வழங்கவில்லை.

நிலுவைத் தொகைக்கான பணத்திற்கு வட்டியுடன் திரும்ப வழங்கிடவும், அதுபோலவே, ஆலை நிர்வாகம் மோசடியாக, கரும்பு விவசாயிகள் பெயரில், வங்கிகள் மூலம் ரூபாய் 500 கோடி வரை கடன் பெற்று இதுவரை திரும்ப செலுத்தாததால், விவசாயிகள் பெயரிலான கடன் வங்கிகளில் அப்படியே நிலுவை உள்ளதால் கரும்பு விவசாயிகள் பெரும் துயரத்தில் உள்ளனர்.

எனவே, இது குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு, மோசடியாக கடன் பெற்ற ஆலை நிர்வாகத்தினர், மோசடிக்கு உடைந்தையாக இருந்த வங்கி நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும், விவசாயிகள் நலன் கருதி, ஆலை நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும் என வலியுறுத்தி, கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை முன்பு, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தை சேர்ந்த ஏராளமான கரும்பு விவசாயிகள் கையில் தேசிய கொடி, கரும்பு மற்றும் பட்டை நாம சின்னத்துடன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

பேட்டி : சுந்தரவிமல்நாதன், செயலாளர்,

காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here