செங்கல்பட்டு, மே. 18 –  

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகேவுள்ள டாஸ்மாக் கடைக்கு  நேற்று மாலை மதுப்பிரியர் ஒருவர், சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பு ஒன்றிணை தோளில் துண்டைப் போடுவது போல் அப் பாம்பை போட்டுக் கொண்டு, நண்பர் ஒருவருடன் மது வாங்க இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.

அப்போது, அக்கடையில் மது வாங்க கூட்ட நெரிசலில் நின்றுக் கொண்டிருந்த சக மதுபிரியர்கள் பயந்து தலை தெறிக்க அலறியடித்து ஓடியுள்ள சம்பவம் அப்பகுதியில் நடந்தேறிவுள்ளது.

தொடர்ந்து அப்பாம்பை கையில் வைத்துக்கொண்டு வேடிக்கை காட்டியபடி டாஸ்மாக் கடையின் முன்பு அவர் இருந்ததால், அவ்வழியாக அச் சாலையில் சென்ற வாகன ஒட்டிகளும் பாதசாரிகளும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டே அப்பகுதியை கடந்து சென்றனர்.

பின்னர் அப் பாம்பை அவர் அணிந்திருந்த லுங்கியில் போட்டு மடித்துக் கட்டிக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏறி சென்றார். பின்னர் அவரை பின் தொடர்ந்து சென்ற போது, வாகனத்தில் அப்பாம்பு அடிப்பட்டு உயிரிழக்காமல் இருப்பதற்காக அவர் பிடித்து வந்திருந்த அந்த பாம்பை புலிப்பாக்கம் அருகே கொள்வாய் ஏரி அருகேயுள்ள முட்புதரில் பாதுகாப்புடன் விட்டுச் சென்றார்.

அதுக் குறித்து அந் நபரிடம் கேட்ட போது, தான் செங்கல்பட்டு அருகேயுள்ள பரனூரை சேர்ந்தவரென்றும் தனது பெயர் சங்கர் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து அவர்,  தான் வரும் வழியில் அப்பாம்பு குறுக்கே ஓடியதாகவும், மேலும் அப்பாம்பு வேறு எந்த வாகனங்களிலும் அடிப்பட்டு உயிரிழந்து விடக் கூடாதென, தான் கருதியாததால், அதனைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டேன் என்றார். தற்போது அவசரமாக டாஸ்மாக்கிற்கு மது வாங்க வந்ததால் சற்று இஙுகு பரபரப்பாகிவிட்டதென்றார்.

சினிமாவில்தான் நாம் பார்த்துயிருப்போம் பேருந்தில் அமர்வதற்கு பாம்பைக்காட்டி இருக்கையை பிடிப்பதை, ஆனால் நிஜவாழ்விலும் டாஸ்மாக்கிற்கு வேடிக்கையாக பாம்பை கொண்டு வந்து, எளிதாக மது பாட்டிலை வாங்கிச் சென்றதை, அதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here