திருவள்ளூர், மே. 18 –
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கோடைக்கால நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட அமமுக மாவட்ட செயலாளர் அனுப்பம்பட்டு பி.வி. சங்கர்ராஜா தலைமையிலும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் டாக்டர் பி.ராம்குமார், மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர்கள் பானுமதி, மாலதி, ஆரணி பேருர் அமமுக செயலாளர் தன்ராஜ் ஒன்றிய அமமுக செயலாளர்கள் ஜெயகுமார், முனுசாமி, தமிழ்மணி, முனிரத்தினம், உள்ளிட்டவர்கள் முன்னிலையிலும் நடைப்பெற்றது.
மேலும் இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சரும், தென் சென்னை அமமுக மாவட்ட செயலாளருமான செந்தமிழன் அக்கட்சிக் கொடிக்கம்பத்தில் புதிய கொடியேற்றி தொடர்ந்து கோடைக்கால நீர் மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அக்கட்சி தொண்டரகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் குளிர் பானங்களை வழங்கினார். மேலும் தச்சூர், ஆரணி பேரூராட்சி, பெரியபாளையம், பூவாலம்பேடு, மாதர் பாக்கம் உள்ளிட்ட ஐந்து இடங்களில் இதுப்போன்ற நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இவ்விழாவின் முதல் நாளான இன்று தர்பூசணி, மோர், குளிர்பானம், வெள்ளரிப்பிஞ்சு, உள்ளிட்ட பொருட்களை பொதுமக்களுக்கு அக்கட்சியினர் வழங்கினார்கள்.
மேலும் இந்நிகழ்வில் பேரூர் அமமுக செயலாளர் சதீஷ், தயாளன், நந்தியம்பாக்கம் ஊராட்சி அமமுக செயலாளர் ஜெயம் மதன், மீஞ்சூர் ஒன்றிய பொறுப்பாளர் அத்திப்பட்டு விக்ரமன் உள்ளிட்ட அமமுக கட்சியின், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி ,கிளைச் செயலாளர்களும், மேலும் திரளான அக்கட்சித் தொண்டர்களும் பங்கேற்றனர்.



















