மீஞ்சூர், மே. 18 –
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உடப்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சி பகுதியில் உள்ள கொங்கி அம்மன் நகரில், சுமார் 500 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியை சுற்றி வெளியேற முடியாமல் பல மாதங்களாக கழிவு நீர் கலந்த மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் தொடர்ந்து அப்பகுதிக்கு கழிவு நீர் வந்த நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் தேங்கி நிற்கும் அக்கழிவு நீரால் வீசி வரும் துர் நாற்றத்தால் உண்டு உரங்க முடியாமலும், மேலும் அதில் உற்பத்தியாகும் கொசுத் தொல்லையால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மற்றும் உடல்நிலைப் பாதிக்கப்பட்ட நோயாளிகள் என அனைவரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாக அப்பகுதி வாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் இப்பிரச்சினைக் குறித்து, அத்துறைச் சார்ந்த உள்ளூர் மற்றும் ஒன்றிய மாவட்ட அளவிலான அனைத்து அரசு அலுவலகத்திலும் பலமுறை புகார் மனு வழங்கப்பட்டும், ஆட்சி அதிகாரம் கொண்ட அரசியல்வாதிகள் முதல் அரசு அலுவலர்கள் வரை யாரும் இப்பிரச்சினை குறித்து நடவடிக்கை எடுக்காமல் பாராமுகத்துடனும் மெத்தனப்போக்குடன் செயல் பட்டு வருகின்றனர்.
மேலும் இப்பிரச்சினைக்கு அரசு உடனடியாக தீர்வுக் காணாத நிலையில் அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாங்கள் ஈடுபடுவதை தவிர்க்கமுடியது எனவும், மேலும் அதுக்குறித்து ஊர் மக்கள் ஒன்றுக் கூடி முடிவெடுத்து ஆர்ப்பாட்டம் நடத்திட தயராகி வருவதாகவும், அப்பகுதி குடியிருப்போர் நல சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
























