அம்பத்தூர், ஆக. 15 –
சென்னை அடுத்த அம்பத்தூரில் அமைந்துள்ள ஞான சாய்பாபா ஆலயத்தில் யாகங்கள் பூஜைகள் வழிபட்டு இந்து மக்கள் கட்சி ஆன்மீக அணி மாநில தலைவர் பரசுராம குருஜி 75வது சுதந்திர தின விழா முன்னிட்டு கொடி ஏற்றி அன்னதானம் மற்றும் இனிப்புகள் பொதுமக்களுக்கு வழங்கினார்.
உடன் மாநில இணைச் செயலாளர் சாய் மோகன் திருவள்ளூர் மாவட்ட மண்டலத் தலைவர் மோகன் மாநில ஊடகப் பிரிவு பொறுப்பாளர் தமிழ் அலை ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள் மாவட்ட மண்டல நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.