திருவள்ளூர், ஜூன். 07 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்துள்ள அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில் வசித்து வருபவர் பரசுராமன் இவரது மகன் சாமுவேல் வயது 18 பதினோராம் வகுப்பு கல்வி பயின்று வருகிறார்.

இந்நிலையில் பள்ளி கோடை விடுமுறை என்பதால் தந்தைக்கு உதவியாக காட்டுப்பள்ளி பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு அருகே அமைந்திருக்கும் டீக்கடைகளுக்கு பால் பாக்கெட் விநியோகம் பணியினை செய்து வந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் பால் பாக்கெட்டுகளை எடுத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது காட்டுப்பள்ளி கிராமத்திற்கு மேம்பாலத்தின் மேல் வரும்பொழுது இவருக்கு முன்பாக சென்றுக் கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டூர் காவல் நிலையம் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here