திருவள்ளூர், மார்ச். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்

திருவள்ளூர் மாவட்டம், தங்கனூர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகன் திருவள்ளூர் பகுதியில் உள்ள பாரதிதாசன் எனும் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பள்ளி வளாகத்திற்குள் உள்ள இருசக்கர வாகன பார்க்கிங் பகுதியில் சக மாணவர்களுடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடியை திருப்பி தலை வாரியதாகவும் மேலும் வாகனத்தின் ஆக்சிலேட்டரை அவர் முறுக்கியதாக கூறப்படுகிறது.

அந்த இருசக்கர வாகனத்திற்கு சொந்தகாரரான அப்பள்ளி ஆசிரியர் அது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் தனது இருசக்கர வாகனத்தை பழுது செய்து விட்டதாக தகவல் தெரிவிக்க அம் மாணவன் உட்பட மூன்று மாணவர்களை பள்ளி நிர்வாகம் இரண்டு நாட்கள் சஸ்பெண்ட் செய்து உள்ளதாக தெரிய வருகிறது.

மேலும் அதுக் குறித்து மணிகண்டனின் மகன் தனது பெற்றோரிடம் அப்பள்ளியில் நடந்த அனைத்து சம்பவங்கள் அனைத்தையும் தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அப்பள்ளி மாணவனின் தந்தை மணிகண்டன் பள்ளி நிர்வாகத்திடம்  பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யுமாறு கேட்டபோது அதை எல்லாம் உங்களிடம் காட்ட முடியாது எனவும் மேலும் உன்னால் முடிந்ததை பார்த்து கொள் என அவரை அவமரியாதை செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த மாணவன் தான் படிக்கும் பள்ளி நிர்வாகம் தனது அப்பாவை அவ மரியாதை செய்துவிட்டதால் அம்மாணவன் மன உளைச்சலுக்கு உள்ளாகிவுள்ளார். இந்நிலையில் அவர்களின் வீட்டிலிருந்த தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலைக்கு முயன்று உள்ளார்.

அத் தகவலறிந்த அம்மாணவனின் பெற்றோர்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் அறிந்த திருவள்ளூர் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அச்சம்பவத்தால் அப் பள்ளி மாணவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

பேட்டி: மணிகன்டன் (மாணவனின் தந்தை)

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here