திருவள்ளூர், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
திருவள்ளூர் நாடாளுமன்ற ( தனி ) தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி இன்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், முன்னாள் எம்பி வேணுகோபால், மற்றும் சிறுனியம் பலராமன் தே.மு.தி.க சுதீஷ் ஆகியோர் முன்னிலையில் தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி தனது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார்.
நாடாளுமன்ற தேர்தலுக்காக கடந்த 20-ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள நிலையில், 3 நாட்களாக திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் செய்யப்படாத நிலையில், இன்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் முதல் வேட்பாளராக தேமுதிக சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ரமணா, மாதவரம் மூர்த்தி, முன்னாள் எம்பி வேணுகோபால், சிறுனியம் பலராமன் ஆகியோர் முன்னிலையில் தேமுதிக வேட்பாளர் நல்ல தம்பி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, திருவள்ளுர் தொகுதியில் அமோக வெற்றி பெறுவேன் என தெரிவித்தார். தேமுதிகவில் விசுவாசத்துடன் இருந்ததால் திருவள்ளூர் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளேன் எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.
பேட்டி:
நல்லதம்பி (தேமுதிக வேட்பாளர்-திருவள்ளூர் தொகுதி)






















