கும்பகோணம், மார்ச். 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், தாராசுரம் அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்டித்து கால வரையற்ற போராட்டம் நடத்த போவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கும்பகோணத்தில் தாராசுரம் காய்கறி மார்க்கெட். தமிழகத்திலேயே மூன்றாவது பெரிய மார்க்கெட்டான இதில், 450 பெரிய கடைகளும், 500-க்கும் மேற்பட்ட சிறிய கடைகளும் உள்ளன.
இந்த மார்கெட்டை வாழ்வாதாரமாகக் கொண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு, தினந்தோறும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 300 டன் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது.
தினமும் சுமார் ரூ.2 கோடி வரை வர்த்தகம் நடக்கும். இந்நிலையில் 383 தரைக்கடை வியாபாரிகளும் 140 மொத்த வியாபாரிகள் என 523 கடைகள் உள்ளன.
கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் தரைக்கடை வியாபாரிகளுக்கு தினசரி ரூ 60 வாடகை வசூல் செய்யப் பட்டிருக்கிறது. தொடர்ந்து அதை வாடகை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை அண்ணா நேரு காய்கறி மார்க்கெட்டில் ஆலோசனை கூட்டம் தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் மணி தலைமையில் நடைபெற்றது.
அண்ணா நேரு காய்கறி மார்க்கெட் சங்க தலைவர் சிவபுண்ணியம், ஒப்பந்தக்கார ஆர் ஏ எஸ் ஆசைத்தம்பி, தக்காளி வியாபாரி கிருஷ்ணமூர்த்தி, சரவணன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில் தரைக்கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் மணி தெரிவித்த போது தராசுரம் காய்கறி மார்க்கெட்டில் நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
ஒப்பந்ததாரர் வாடகை வசூல் விபரத்தை விளம்பர பலகையாக வைக்க வேண்டும். மாநகராட்சி ஒப்பந்தப்படி தரைக்கடைக்கு ரூ.60 ம், டாரஸ் லாரிக்கு ரூ.600ம், லாரிக்கு 400ம், மினி வேனுக்கு ரூ.250ம் கட்டணமாக வசூலிக்க வேண்டும்.
ஆனால் ஒப்பந்ததாரர் அதனை மீறி இரண்டு மடங்காக வாடகை வசூலிக்கிறார். இனிமேல் ஒப்பந்த தொகையை விட கூடுதலாக பணம் கேட்டால் ஒரு ரூபாய் கூட சங்கம் சார்பில் கொடுக்க மாட்டோம்.
மீறி கூடுதல் கட்டணம் கேட்டால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாக தெரிவித்தார்.























