திருவாரூர், ஆக. 13 –

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர். டி.ஆர்.பி.ராஜா தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் அக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சாருஸ்ரீ, மாவட்ட காவல் கண்கானிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன், மாவட்ட ஊராட்சித்தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் பல மணி நேரமாக நடைப்பெற்ற இவ்வாய்வுக் கூட்டத்திற்கு பின்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பங்கேற்ற அமைச்சர் முனைவர். டி.ஆர்.பி.ராஜா தெரிவிக்கும் போது,

திராவிட நாயகன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க ஆட்சியர் கூட்டரங்கில் அனைத்துறை அலவலர்களுடான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது எனவும், திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் சீரிய திட்டங்களான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், இ-வாடகை குறித்தும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்- ஐஐ, சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்பு, தீனதயாள் உபாத்யா கிராமின் கௌசல்யா திட்டம், குடிநீர் விநியோகம்; (ஊரகம்) உள்ளிட்ட திட்டங்கள் குறித்தும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம், நமக்கு நாமே திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம் குறித்தும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு அரசின் இ-சேவை மையம், பள்ளி கல்வித்துறையின் எண்ணும் எழுத்தும் இயக்கம், பள்ளி உட்கட்டமைப்பு, அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதம், சிறப்பு திட்ட செயலாக்கமான நான் முதல்வன் திட்டம், முதல்வரின் சிறப்பு திட்டாக்கப் பணிகள் செயல்பாடுகள் குறித்தும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப்பணிகள், அங்கான்வாடிகள், புதுமை பெண் திட்டம் குறித்தும், மருத்துவத்துறையின் மக்களை தேடி மருத்துவம் குறித்தும், முதல்வரின் முகவரி திட்டம்  உள்ளிட்ட திட்டங்களின் செயல்பாடுகள் முன்னேற்றம்  குறித்து ஆய்வு செய்யப்பட்டது என அப்போது அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து அமைச்சர்,  தென் மாவட்டங்களில் அதிகமாக தொழில்பேட்டைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும், வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்களை தொடங்கியுள்ளது எனவும் அதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றவர், அதிலும் குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் விவசாயம் சார்ந்த தொழிற்பேட்டைகள் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆலோசனையின் படி விரைவில் தொடங்கப்படும் என்றார்.

மேலும் தென்மாவட்டங்களில் அதிக தொழில் முதலீடுகள் கொண்டு வரப்படும் என தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் ஆட்சியர் கூட்டரங்கில் நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன், திட்ட இயக்குநர் சந்திரா, வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்), கீர்த்தணாமணி (மன்னார்குடி), திருவாரூர் நகரமன்ற தலைவர் புவனபிரியா செந்தில், மன்னார்குடி நகரமன்ற தலைவர் மன்னை.சோழராஜன், திருவாரூர் நகரமன்ற உறுப்பினர் பிரகாஷ், உள்ளிட்ட அனைத்துதுறை உயர் அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here