மீஞ்சூர், மார்ச். 17 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு பகுதியில் அமைந்துள்ள வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின் ஊழியர்கள் சார்பில் கவன ஈர்ப்பு கூட்டம் அனல் மின் நிலைய நுழைவு வாயில் முன்பு இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தினை ஐ என் டி யு சி யின் மாநில துணை பொது செயலாளர் எம் பி தாமோதரன் தலைமையேற்று வழி நடத்தினார். மேலும் இதில் சி ஐ டி யு பாண்டியன், இன்ஜினியரிங் யூனியன் கண்ணபிரான், மகேஸ்வரன், அதிமுக பூபாலன், இன்ஜினியரிங் சங்கம் பாலகிருஷ்ணன், உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

மேலும் இக்கூட்டத்தில் ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புவது, உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி மார்ச் 28 ஆம் தேதி, தலைமைச்செயலகம் நோக்கி பேரணி நடத்தப்போவதாகவும் தெரிவித்தளர்.

தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் வடசென்னை கிளைகள் ஒன்று இரண்டு மூன்று நான்கு சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஏராளமான மின்வாரிய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், மின்வாரிய பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றித் தர மின்வாரிய நிர்வாகம் இதுவரை முன் வராததாலும் இதனை தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக எதிர்வரும் மார்ச் 28 ஆம் தேதி அன்று மின்வாரிய தலைமையகத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாக சென்று மனு அளிக்க இருப்பதாகவும் அப்போது அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அதனின் அடையாளமாகவும், முதற்கட்டமாகவும்தான் இன்று நடைப்பெற்ற நுழைவாயில் கூட்டம் எனவும் அப்போது அவர்கள் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், மார்ச் 28 அன்று கோரிக்கையை ஏற்காவிட்டால் பணி புறக்கணிப்பு போராட்டம் நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்நிகழ்வின் போது, சங்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here