பொன்னேரி, ஜூலை. 01 –
உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி லயன்ஸ் சங்கம், சென்னை சோசியல் லயன்ஸ் சங்கம், பாடியநல்லூர் லயன்ஸ் சங்கம் மற்றும் தமிழ் சிங்கம் லயன்ஸ் சங்கங்கள் இணைந்து மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு பொன்னேரி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பொன்னேரி லயன்ஸ் சங்க தலைவர் சுகுமார் தலைமை தாங்கினார். வட்டாரத் தலைவர் நண்பன் எம்.முகமது அபுபக்கர் வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர்கள் மீனாட்சி சுந்தரம், பிரவீன், ராஜா, பாடியநல்லூர் லயன்ஸ் சங்க செயலாளர் சந்திரசேகர், உறுப்பினர் சேர்க்கை இயக்குனர் வழக்கறிஞர் சாந்தகுமார், இணைச் செயலாளர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர், மற்றும் பொன்னேரி அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவர்களுக்கு பூங்கொத்து, இனிப்பு வழங்கி நினைவுப் பரிசுகளை வழங்கினர்.
பொன்னேரி லயன்ஸ் சங்க செயலாளர் சந்திரசேகர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.























