திருவாரூர், ஆக. 14 –

76 வது இந்திய சுதந்திரத் தினத்தை முன்னிட்டு, திருவாரூர் மாவட்ட தமுமுக மருத்துவ சேவை அணி மற்றும் திருவாரூர் மருத்துவக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் நேற்று, அக்கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் M.நூர் முகம்மது தலைமையில் நடைபெற்றது.

மேலும் இந்நிகழ்வில் தமுமுக மாநில பொதுச் செயலாளர் J.ஹாஜா கனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அம் மருத்துவ இரத்ததான முகாமை துவக்கி வைத்தார்.

இதில் மாநில தலைமை பிரதிநிதி வெங்கலம் A. ஜபருல்லாஹ், மாவட்ட தலைவர் M.முஜிபுர் ரகுமான், அமீரக பொறுப்பாளர் Er. முஹம்மது கஜ்ஜாலி, டாக்டர் K.அன்வர்சதாத், டாக்டர் S.திலீபன், நல்லாசிரியர் எண்கண் மணி  ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

மேலும் மமக மாவட்ட செயலாளர் A.குத்புதீன், மாவட்ட பொருளாளர் புலிவலம் நியாசுதீன், மாவட்ட துணைத் தலைவர் M.H.சாகுல் ஹமீது, மருத்துவ சேவை அணி துணைச் செயலாளர்கள் R. அபூபக்கர் சித்திக், திருவாரூர் நகர மன்ற உறுப்பினர் M. பெனாசிர் ஜாஸ்மின்,  B.ஷகிலா பானு, பொதக்குடி அகமது மற்றும் மாவட்ட துணை நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இச் சிறப்புமிகு முகாமில், திரளானவர்கள் பங்கேற்று இரத்ததானம் செய்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here