திருவண்ணாமலை, அக்.9-
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த 12 மெட்ரிக் டன் விதைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் மண்டல விதை ஆய்வு துணை இயக்குநர் கோ.சோமு, தெரிவித்திருப்பதாவது திருவண்ணாமலை மற்றும் செங்கம் பகுதியில் உள்ள தனியார் மற்றும் அரசு துறை விதை விற்பனை நிலையங்களில் வேளாண்மை துறை அதிகாரிகள் மற்றும் விதை ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் 14 விதை விற்பனை நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது விதை விற்பனை நிலையங்களில் போதிய ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைத்திருந்த 12.164 மெட்ரிக் டன் விதைகள் தற்காலிகமாக விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.5.49 லட்சம் ஆகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.