மயிலாடுதுதறை, மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
மயிலாடுதுறை மாவட்டம், தமிழக இளைஞர்களின் அரசு பணி கனவை சிதைத்து எதிர்காலத்தை சீர்குலைக்கின்ற வகையில் தலை விரித்தாடும் போதைப் பொருள் கலாச்சாரத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
.மாவட்ட செயலாளர் பொன்.பாரிவள்ளல் தலைமையில் நடைபெற்ற அவ்வார்ப்பாட்டதில் 200 க்கும் மேற்பட்ட அக்கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட தொண்டர்கள் கலந்து கொண்டு போதைப் பொருளுக்கு எதிராகவும், அதனை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்தும் கண்டன முழக்கமிட்டனர்.