குன்றத்தூர், ஏப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.டார்ஜன் …
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் பேரூராட்சிப் பகுதியில் உள்ள 30 வார்டுகளிலும், திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் ஸ்ரீபெரும்பதூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் டி.ஆர்.பாலுவை ஆதரித்து தமிழ்நாடு வாகன முன்னேற்ற சங்கத்தினர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவுறுத்தலின் படியும், அச்சங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், தமிழக பொதுச்செயலாளர் அருணகிரிநாதன், பொருளாளர் மூர்த்தி, ஆகியோரின் ஆணைக்கிணங்கவும் குன்றத்தூர் மேக்தா நகர் இ.வி.கே வெங்கடேசன் மாநில துணைத்தலைவர் தலைமையில் அச்சங்கத்தின் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் டி.ஆர்.பாலுவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
அப்போது அவர்கள் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் மூன்றாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கிவுள்ள நலத்திட்டங்களை விரிவாக விளக்கிக் கூறியும், மேலும் அத்திட்டங்களினால் யார் யார் பயன் பெற்றுள்ளார்கள் என்ற பயனாளிகளின் புள்ளி விவரங்களை எடுத்துரைத்தும், அச்சடித்த துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
தொடர்ந்து அவர்கள் வாக்காளர்களிடம் இந்தியாக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள மகளிருக்கான ஆண்டுக்கு ஒரு லட்சம் உதவித்தொகை, பெண்களுக்கான 50 சவீத இட ஒதுக்கீடு, டிப்ளோமா மற்றும் பட்டப் படிப்பு முடித்த இளைஞர்களுக்கு ஒரு லட்சம் உதவித் தொகையுடன் பயிற்சி வேலை வாய்ப்பு, உள்ளிட்ட அனைத்து அறிவிப்புகளையும் எடுத்துரைத்தும்,
குறிப்பாக இத்தேர்தல் என்பது முக்கிய தேர்தல் எனவும் அதனால் யாரும் வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள் 100 சதவீதம் வாக்குகளை பதிவு செய்யவேண்டும் என்ற விழிப்புணர்வையும் அவர்கள் மேற்கொண்டனர்.
மேலும் தற்போது நம்நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய ஆபத்து எழுந்துள்ளாதகவும், அதுபோன்று இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும் பெரும் ஆபத்துள்ளது எனவும் அதனால் உங்கள் பொன்னான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து இந்தியா கூட்டணி தலைமையிலான ஆட்சி ஒன்றியத்தில் அமைந்திட ஆதரவு தாரீர் என அப்போது அவர்கள் சந்தித்த அனைத்து வாக்களர்களிடமும் கேட்டுக் கொண்டனர்.



















