மயிலாடுதுதறை, மார்ச். 13 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்

மயிலாடுதுறை மாவட்டம், கடலோர மக்கள் கடல் தாயை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள் என்பது உண்மை என்றால் மீனவர்கள் அதிமுக, திமுகவுக்கு ஓட்டு போடக் கூடாது. என நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காளியம்மாள் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.

சீர்காழி பழைய பேருந்து நிலையம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் மயிலாடுதுறை வேட்பாளர் அறிமுகக்கூட்டம் நடைபெற்றது. அதில்  மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடுகின்ற காளியம்மாள் பங்கேற்று நீண்ட உரை நிகழ்த்தினார்.  அப்போது, ஒருமுறை கூட நான் பேசியதை எனது தந்தை நேரில் பார்த்ததில்லை எனவும் மேலும் இந்த கூட்டத்தில்தான் முதல் முறையாக நான் மேடையில் பேசுவதை அவர் நேரில் பார்க்கிறார் என்றார்.

மேலும், அதிகார வர்க்கத்தை கேள்வி கேட்கும், அடிப்படை மக்களை சமமாக நிறுத்துகின்ற ஒரு தளம் நாம் தமிழர் கட்சி மட்டும்தான் என அவர் புகழராம் சூட்டினார். மேலும் இந்த பயணத்தை பாராளுமன்ற தேர்தலில் உருவாக்க வேண்டும் என்றால் நீங்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

சீர்காழியில் தொடர் வண்டி நிறுத்தத்தில் மாலை 6 மணியிலிருந்து காலை 6 மணி வரை எந்த தொடர் வண்டிகளும் நிற்பதில்லை. என்ற கோரிக்கை  கையெழுத்துகளை வாங்கி டெல்லிக்கு அனுப்பி வைத்தால்தான் தொடர் வண்டி நிற்கும் என்றால், இங்கிருந்து வெற்றி பெற்ற எம்.பி. ராமலிங்கம் என்ன செய்தார். மேலும் எம்.எல்.ஏ வாக சீர்காழியில் வெற்றி பெற்ற பன்னீர்செல்வம்தான் என்ன செய்தார்கள் என்ற கேள்வி எழத்தானே செய்யும். என்ற அவர், மேலும் அப்பிரச்சினைகள் குறித்து சட்டசபையில்  ஏன் பேசவில்லை ? பழைய பாளையம் பகுதி ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எரிந்து கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி முழுக்க மேகம் சூழ்ந்து  மழை வராது. ஓ.என்.ஜி.சி கொண்டு வர கையெழுத்திட்டது, திமுக தானே என்றார். மேலும் கச்சத்தீவை, காவிரியை தாரை வார்த்தது யார் திமுகதானே,. மேகதாதுவில் அணை கட்டுவோம் என பேசுவதை  வேடிக்கை பார்ப்பதுவும் திமுகதானே, மீண்டும் இவர்களுக்கு வாக்கு செலுத்த பொதுமக்கள் தயாராக இருந்தால் கடவுளாலும் காப்பாற்ற இந்நாட்டை காப்பாற்ற முடியாதென்றார்.

மேலும் இப்பகுதியில் 20000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை கொடுக்கக்கூடிய சர்க்கரை ஆலை, பஞ்சாலை, காகிதாலை, பெரிய பால்பண்ணை தொழிற்சாலை என இத்தொகுதியில் இயங்கி வந்த நான்கு தொழிற்சாலைகளை மூடியது  யார் ? அதிமுகவும், திமுகவும்தானே, மேலும் இக் கடலோர வாழ் மக்கள் கடல்தாயை நம்பி வாழ்க்கையை நடத்துபவர்கள் என்பது உண்மை என்றால் மீனவர்கள் யாரும் அதிமுகவிற்கோ, திமுகவிற்கோ வாக்களிக்க கூடாதென்றார். அவ்வளவு பெரிய  துரோகத்தை இப்பகுதி மக்களுக்கு இரு கட்சிகளும் செய்துள்ளனர். என்று தெரிவித்தார்.

எனது தந்தை சிறு வயது முதல் எம்ஜிஆர் பாடலை பாடி, பாடி என்னை எம்ஜிஆர்தான் உலக மகா மேதை என  நம்ப  வைத்திருந்தார்.

மேலும் அவரது கையில் இரட்டை இலை சின்னத்தை பச்சை குத்தி இருப்பார். மேலும் ஜெயலலிதா இறந்து விட்டார் என எனது தந்தை மூன்று நாட்கள் சாப்பிடவில்லை எனவும், அப்போது ஒரு சிம்பத்தியை கிரியேட் செய்தார்.

மேலும் ஜெயலலிதா இறப்பு மர்மமாக உள்ளது ஏன் எனவும், மேலும் இ.பி.எஸ். ஓ.பி.எஸ் அதுக் குறித்து தற்போது வாய்திறப்பில்லையே ஏன் என அடுக்காக ஜெ மறைவுக்குறித்த கேள்விகளை எழுப்பினார்.

மேலும் எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் மெரினாவில் நடந்த போராட்டத்தில் 400  குடும்பங்களை விரட்டி, ஏழு பேரை சுட சொல்லி உத்தரவு போட்டவர்தான் அந்த உத்தமர் எம்ஜிஆர் என்றார்.

எம்ஜிஆர் ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும், ஜெயலலிதா, இபிஎஸ் அதிகாரத்தில் இருந்த போதும் இலங்கை கடற்படை மீனவர்களை பாதுகாப்போம் என சொல்லப்பட்ட காலத்திலேயே, 400 க்கும் மேற்பட்ட கடலோடிகள் சுடப்பட்டு கொல்லப் பட்டிருக்கிறார்கள். என்றார். அப்படி இருக்கும் போது இவர்கள் எவ்வாறு மீனவர்களின் பாதுகாவலனாக இருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பியவாறு உரையை நிறைவு செய்தார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here