கும்பகோணத்தில் கட்டுமான பொருட்களூக்கான ஒழுங்கு முறை ஆணையம் அமைக்க கோரியும் , கட்டுமான பொருட்கள் கடும் விலை ஏற்றத்தை தடுக்கக் கோரி கட்டுமான சங்கம், கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம், அக். 26 –
கும்பகோணத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டட பொறியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காந்தி பூங்கா முன்பு கட்டட தொழில்நுட்ப வல்லுனர்கள் சங்க தலைவர் ரமேஷ் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அகில இந்திய கட்டுனர் வல்லுநர் சங்க தலைவர் கார்த்தி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அனைத்து கட்டிடப் பொறியாளர்கள் கூட்டமைப்பு மாநில தலைவர் சரவணன் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் கடந்த ஒரு ஆண்டு காலமாக கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் என்பதும் மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாதது போல் பொருட்களின் விலை எட்டா தூரத்தில் இருக்கின்றது . குறிப்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் 20 சதவீதம் விலை ஏற்றத்துடன் காணப்பட்ட கட்டுமான பொருட்களின் விலை தற்போது 40 சதவீதம் வரை விலை ஏற்றத்துடன் காணப்படுகிறது.
குறிப்பாக கட்டுமானப் பொருட்களான மணல் சிமெண்ட் செங்கல் ஜல்லி மற்றும் ஸ்டீல் கம்பிகள் ஆகியவற்றின் விலைகள் தொடர்ச்சியாகவே அதிகரித்த வண்ணமே உள்ளது .அதிலும் கட்டுமானத் துறையில் அதிக அளவு பயன்படுத்த கூடிய சிமெண்ட் மற்றும் ஸ்டீல் கம்பிகளின் விலை மற்றும் பெரிதளவில் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளதாகவும் , கடந்த 60 ஆண்டு காலத்தில் குறிப்பாக 6 மாத வித்தியாசத்தில் இதுபோன்ற 40 சதவீத கட்டுமான பொருட்களின் விலை உயர்வை இதுவரை சந்தித்ததில்லை என்றும் கட்டுமான பொறியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஊரடங்கிற்கு முன்பு ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூபாய் 300 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது 600 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது அதேபோல் கட்டுமானக் கம்பிகள் ஒரு டன் 68 ஆயிரம் ரூபாயில் இருந்து 75 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மணலின் விலை ஒரு யூனிட் 5000 என்று விற்கப்பட்ட நிலையில் தற்பொழுது 6000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது மேலும் செங்கல் ஒரு லோடு 18 ஆயிரம் ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதேபோல் ஜல்லிகளின் விலையும் 3000 என்று விற்கப்பட்ட நிலையில் தற்போது 4000 மேல் விற்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த கோரியும் ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கக் கோரி 50க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.