மீஞ்சூர், ஏப். 12 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட மீஞ்சூர் பேரூராட்சியின் சார்பில் அப்பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டியூட்டுடன் இணைந்து நடத்திய இலவச புற்றுநோய் தடுப்பு மற்றும் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மேலும் முகாமினை பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் துவக்கி வைத்தார், மேலும், செயல் அலுவலர் வெற்றியரசு, துணைத் தலைவர் அலெக்ஸாண்டர், ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் மகேந்திரவர்மன், துப்புரவு பணி மேற்பார்வையாளர் கோபிநாத், வார்டு கவுன்சிலர் அபூபக்கர், ராஜேஷ் ஜெயலட்சுமி, நக்கீரன், பரிமளா அருண்குமார், சேகர், உள்ளிட்டவர்கள் இம்முகாமிற்கு முன்னிலை வகித்தனர்.
மேலும் மீஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு, தங்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டு பயன் பெற்றனர்.
மேலும், சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டிடியூட் மருத்துவர்கள் டாக்டர் வித்யா, சோசியல் அலுவலர்கள் ரூபி, பாரதி, தலா, ஆஷா, தமிழ், குணா, பரத், உள்ளிட்டவர்கள் பங்கேற்று அம்மருத்துவ முகாமிற்கு வந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.






















