கொளத்தூர், செப் . 21
தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.83.55 லட்சம் மதிப்பிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையம், நியாயவிலைக் கடை, விளாயாட்டுத்திடல் மற்றும் பூங்கா ஆகிய முடிவுற்ற நலத்திட்ட பணிகளை திறந்து வைத்தார். மேலும் 167 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து அனிதா அச்சுவர்ஸ் அகடாமியில் டேலி பயின்ற 157 மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டுள்ள கட்டங்கள் திறப்பு ;
கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாதவரம் நெடுஞ்சாலை செயின்ட் மேரீஸ் பள்ளிக்கு அருகில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையத்தை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை முதலமைச்சர் வழங்கினார்.
அதைப் போன்று பல்லவன் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.24.60 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையினை திறந்து வைத்து, குறிப்பிட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவாசிய பொருட்களை வழங்கி அவ்வாளகத்திற்குள் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
சீனிவாச நகர் 3 வது குறுக்கு தெருவில் ரூ.28 இலட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சிறுவர் விளையாட்டு திடல் மற்றும் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைத்து சிறுமியர் மற்றும் சிறுவர்களுடன் உரையாடினார்.
மேலும் பெரியார் மேல் நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற அனிதா அச்சீவர்ஸ் அகடாமியில் டேலி பயின்ற 157 மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.
தொடர் நிகழ்ச்சியாய் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகை தொகுதி மக்களுக்கு மருத்துவ உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாவு அரவை இயந்திரங்கள், இஸ்திரி பெட்டிகள் , மீன் வண்டிகள் என மொத்தம் 167 பயனாளிகளுக்கு முதலமைச்சர் நல உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசமி, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்சிங் பேடி , கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஏ.சண்முக சுந்தரம், கூடுதல் பதிவாளர் ( நுகர்வோர் பணிகள் ) எம்.அருணா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.