திருவண்ணாமலை மாவட்டத்தில் 2வது – மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் 19.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ், தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை, செப். 17 –

 

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2 வது – மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் 19.09.2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. பா. முருகேஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (16.09.2021) நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 12.09.2021 தேதி அன்று நடைபெற்ற மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாமில் 1,04,325 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 2வது – மாபெரும் கோவிட்-19 தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதால தடுப்பூசி செலுத்தி கொள்ளாத பொதுமக்கள் அனைவரும் மீண்டும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி போடுவதற்கு அனைத்துத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுரை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை பொதுமக்கள் 52மூ  கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு 100மூ இலக்கினை அடையவும்,  100மூ  கொரோனா நோய் தொற்று இல்லா மாவட்டமாக திகழ வேண்டும் எனவும், தங்கள் அனைவரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே இந்த பணியினை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் செயல்படுத்திட இயலும். மக்கள் அனைவரையும் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப மேற்கொள்ளப்படும் இந்த மாபெரும் உன்னத முயற்சியில் நீங்கள் அனைவரும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அனைத்து துறை தலைமை அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா. முத்துக்குமரசாமி, கூடுதல் ஆட்சியர், திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திரு. மு. பிரதாப், இ.ஆ.ப., திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் திருமதி.பெ.சந்திரா, இணை இயக்குநர்கள் (சுகாதார பணிகள்) திருவண்ணாமலை, மரு.செல்வகுமார் மற்றும் (செய்யாறு) மரு.பிரியா ராஜ் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here