புதுச்சேரி, பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …

புதுச்சேரி யூனியன் பிரதேசம், புதுச்சேரியில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். மேலும் அவர் புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் பேக்கரி ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் அவரது கடையில் கடந்த 2 ஆம் தேதி அன்று அதிகாலை கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து மர்ம நபர் ஒருவர் கடையில் வைத்திருந்த விற்பனைப் பணம் ரூ. 1.25 லட்சத்தை திருடி சென்றுள்ளார்.

மேலும் அதே போல் அன்றைய தினமே அருகே இருந்த டீ கடையில் ரூ. 18 ஆயிரம் திருடி சென்றுள்ளார். மீண்டும் அதே நபர் கடந்த 12 ஆம் தேதி ஏற்கனவே கொள்ளையடித்த பாலமுருகனின் பேக்கரி கடையின் ஷட்டர் பூட்டை திரும்பவும் உடைத்து பணம் திருட முயன்றுவுள்ளார். ஆனால் அங்கு பணம் இல்லாத காரணத்தால் அருகே இருந்த மருந்தகத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து ரூ. 50 ஆயிரம் திருடி சென்றுள்ளார்.

இந்நிலையில் கடைகளின் உரிமையாளர்கள் சிசிடிவி காட்சிகளுடன் வில்லியனூர் காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகளுடன் அளித்த புகார்களின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்த போது அந்த கொள்ளையன் விழுப்புரம் வழியாக செல்வது தெரிய வந்தது, அதனையடுத்து அந்த காட்சிகளை அண்டை மாநிலமான தமிழக போலீசாரிடம் அனுப்பி விசாரித்துள்ளனர்.

புதுச்சேரி கடைகளை உடைத்து திருட்டில் ஈடுப்பட்டது கள்ளகுறிச்சி செம்பட்ட மலையனூர் பகுதியை சேர்ந்த பிரபல திருடன் அய்யப்பன் (24) என தெரிய வந்ததை அடுத்து கல்வராயன் மலையில் பதுங்கி இருந்த அய்யப்பனை கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்து விசாரணை மேற் கொண்டுள்ளனர்.

அப்போது அய்யப்பன் தனது இரண்டு மூத்த அண்ணன்களுடன் இது போல் கொள்ளை சம்பங்களில் ஈடுப்பட்டு வருவதும், மேலும் வேறொரு திருட்டு வழக்கில் தனது அண்ணன்களுடன் கைதாகி கோவை சிறையில் இருந்து 1 மாதம் முன்பு தான் பிணையில் வெளியே வந்து அங்கிருந்து ஒரு இருசக்கர் வாகனத்தை திருடி வந்ததாகவும், பின்னர் தனது மாமா ஒருவர் புதுச்சேரி எல்லை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதால் அவரை பார்க்க கோவையில் திருடிய வாகனத்தில் வந்த போது அவரை பார்த்துவிட்டு வில்லியனூர் பகுதிக்கு வந்து திருட்டில் ஈடுப்பட்டதாகவும், கொள்ளை அடிக்கும் பணத்தில் தான் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருவதாகவும் போலீசாரின் விசாரணையில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

.அதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அய்யப்பனிடம் ரூ. 50 ஆயிரத்தை பறிமுதல் செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here