புதுச்சேரி, பிப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…

புதுச்சேரியில் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வருகை புரிந்த ஓபிஎஸ் காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஓய்வெடுத்தார். அப்போது அவருக்கு மாநில கழக செயலாளர் ஓம் சக்திசேகர் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது ஓபிஎஸ்சை வரவேற்ற பெண்கள் அவருக்கு சால்வைகள் அணிவித்தும் பூங்கொத்துகள் கொடுத்தும் மகிழ்ந்தனர்.

புதுச்சேரி தனியார் உணவகத்தில் ஓய்வெடுத்த ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்…

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் நாங்கள் போட்டியிடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம் பொறுத்திருந்து பாருங்கள் அதிமுக எங்களுக்குதான் சொந்தம் என்று தீர்ப்பு வரும் என்றார்.

தொடர்ந்து தேர்தல் ஆணையத்திடம் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு நாங்கள் பேசி வருகிறோம் என்று குறிப்பிட்ட அவர் அதிமுக பிஜேபியுடன் 10 ஆண்டுகள் கூட்டணியில்தான் இருந்து வருகிறது என்றும்

அதிமுக, இரட்டை இலை சின்னம், இபிஎஸ்க்கு கிடைத்த வெற்றி தற்காலிக தீர்ப்புதான் என்று குறிப்பிட்ட ஓ.பி.எஸ்.அதிமுக தங்களிடம்தான் வரும் என்று உறுதிப்பட தெரிவித்தார்.

.இபிஎஸை நம்புவதற்கு கட்சியில் யாரும் தயாராக இல்லை அதற்கு காரணம் என்னவென்றால் அவருக்கு நன்றி செய்த யாரையும் அவர் நினைத்துப் பார்ப்பதில்லை என்று குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரன் உடன் கூட்டணியில் இருக்கின்றோம். சசிகலா கூட்டணி உள்ளீர்களா என்ற கேள்விக்கு.அதை அவர்களிடம் தான் கேட்க வேண்டும் சசிகலா அழைத்ததால் ரஜினிகாந்த் அவர் வீட்டிற்கு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும்  இபிஎஸ் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள் என்று தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here