அத்திப்பட்டு, மார்ச்.01 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட அத்திப்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிடக் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு க ஸ்டாலின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளியவர்களுக்கு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல். துணைத் தலைவர் எம் டி ஜி கதிர்வேல். உள்ளிட்டவர்கள் தலைமை வகித்தனர்.
மேலும் அத்திப்பட்டு ஊராட்சி திமுக பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் வல்லூர் எம். எஸ்.கே.ரமேஷ்ராஜ் முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு அப்பகுதியில் புதியக் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் கட்சித் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து அவர் அப்பகுதியில் உள்ள அண்ணா, அம்பேத்கர், காமராஜர், இந்திராகாந்தி, நேரு, உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மேலும், இவ்விழாவின் சிறப்பிக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஆயிரம் நபர்களுக்கு அன்னதானமும், கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களுக்கு வேட்டி ,சேலைகள், வழங்கப்பட்டது.
இதில் அத்திப்பட்டு அவைத்தலைவர் சங்கர். வல்லூர் பா.தூ. தமிழரசன், முன்னாள் கவுன்சிலர் சங்கர். கோமதிநாயகம். ரவி. உள்ளிட்ட திரளான திமுக கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





















