தஞ்சாவூர், ஏப். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சாவூர் மாவட்டம், நாடாளுமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மேலும் ஓட்டுக்காக பணம் பெறக்கூடாது என்பதை அறிவுறுத்தியும் மேலும் வாக்கை வீணாக்காமல் கட்டாயம் ஜனநாயக கடைமையை நிறைவேற்ற வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் சார்பில் தஞ்சாவூரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மேலும் அப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர், தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் தொடங்கிய பேரணியில் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடியும் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முழங்கியவாறும் சென்றனர்.