தஞ்சாவூர், ஏப். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், திமுக வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சை கீழவாசல் பகுதியில் வாக்கு சேகரிப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர், திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாகவும், மேலும் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது, திராவிட மாடல் அரசு என்பது தமிழகத்தில் மட்டும் இருந்தால் பத்தாது, நமக்கான அனுசரணையான அரசு ஒன்றியத்திலும் இருந்தால்தான் நாம் கேட்கின்ற நிதியாக இருந்தாலும் சரி, பல்வேறு திட்டங்களாக இருந்தாலும் சரி, நாட்டின் வளர்ச்சிக்கு பெரிதும் பயன்படும்,  பெண்கள்தான் எங்களுக்கான பிரச்சார பீரங்கி என்றும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு கேஸ் விலை குறைவாக இருந்தது, இன்றைக்கு அதன் விலைக் குறித்து பெண்கள் அனைவருக்கும் தெரியும் எனவும் மேலும் மகளிர் தினத்தை முன்னிட்டு கேஸ் விலை குறைப்பு என்று பிரதமர் கூறுகிறார், ஒவ்வொரு ஆண்டும் மகளிர் தினம் வருவது அவருக்கு தெரியவில்லையா என அப்போது பிரதமருக்கு கேள்வியெழுப்பினார்.

தேர்தல் வந்தால் மட்டும் தெரிகிறதா, மீண்டும் பிரதமராக வருவதற்காக மகளிர் தினம் மட்டுமல்ல, கிழவிகள் தினத்தை கூட பரதமர் கொண்டாடுவார், எல்லா கிழவிகளுக்கும் பாக்கு, வெற்றிலை இலவசமாக தருவேன் என்று கூறுவார், நீங்கள் திறந்து பார்த்தால், சுருக்கு பையில் உள்ள பணத்தை எடுத்து விடுவார் என விமர்சித்தார். மேலும் அப்படிபட்டவருக்கு நீங்கள்தான் தக்க பாடத்தை புகட்ட வேண்டும்  எனக் கேட்டுக் கொண்டார்.

இப்பிரச்சாரத்தின் போது வேட்பாளர் முரசொலி, எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், கூட்டணிக் கட்சிகளைச் சார்ந்த தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here