கும்பகோணம், அக். 03 –
கும்பகோணம் தனியார் விடுதியில், இந்திய கம்யூ கட்சியின் தஞ்சை மாவட்ட மாநாடு நடைபெறுகிறது இதில் பங்கேற்க வருகை தந்த தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், முன்னதாக செய்தியாளர்களை கூட்ட அரங்கில் சந்தித்தார் அப்போது,
தமிழகம் முழுவதும், ஏற்கனவே திட்டமிட்டபடி, மத நல்லிணக்கம், சமூக நீதி காக்க, சாதி, மத மோதல்களை தடுத்து நிறுத்திட, மதசார்பின்மையை காப்பாற்ற, சமூக அமைதி காக்க, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில், மனித சங்கிலி போராட்டாம் வருகிற 11ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி முதல் 6 வரை கிராமங்கள், நகரங்கள் என அனைத்து இடங்களிலும் நடைபெறும் என்றும், இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு சமூக அமைப்பினரும் பங்கேற்கின்றனர். மேலும் இதில் அனைவரும் தவறாமல் குடும்பத்துடன் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு, கடந்த எட்டு ஆண்டுகளில், மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முழுமையாக முழுமையாக நிறைவேற்ற வில்லை என்றும் இனி நிறைவேற்றப் போவதும்இல்லை எனவும் மேலும் அவர்களுக்குரிய பெரும்பான்மை பலத்தை கொண்டு, நாடாளுமன்றத்தில், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு, மக்களுக்கு எதிரான பல சட்டங்களை நிறைவேற்றியுள்ளது, இதனால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது எனத்தெரிவித்தார்.
இதனை மறைக்கவும், திசை திருப்பவும், தற்போது, நாட்டின் ஒரு சில பகுதிகளில் மட்டும் ஆண்டிற்கு ஓர்முறையோ, மூன்று ஆண்டுளுக்கு ஓர்முறையோ நடத்திய ஆர்எஸ்எஸ் பேரணியை தற்போது தமிழகம் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு இடங்களில் நடத்திட திட்டமிட்டு, அதன் வாயிலாக நாட்டில் மத மோதல்களை ஏற்படுத்திட முனைகின்றன என்றும் குற்றம்சாட்டியவர், மின்திருத்த மசோதா மூலம் மின்சாரத்துறையை தனியார்மயமாக்க முயன்று வருகிறது. இதனை தமிழக அரசு ஏற்காத நிலையில், புதுச்சேரியில் நடைபெறுவது பாஜக கூட்டணி அரசு என்பதால் அங்கு இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை கண்டித்து அங்குள்ள மின்த்துறை ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து போராட்டங்களை, சங்கங்களை கடந்து அனைவரும் ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அப்போராட்டாத்தினை தடுத்திடும் வகையில் ஆளுநர் இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவோம் என மின்வாரியத் தொழிலாளர்களை மிரட்டி வருகின்றனர். இந்த அச்சுறுத்தலுக்கு எல்லாம் மின்துறை ஊழியர்கள் அஞ்சமாட்டார்கள் என்றும் எதையும் எதிர்கொள்ள தொழிலாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




















