காஞ்சிபுரம், மார்ச். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் கடந்த 1.3.24 ஆம் தேதி பிளஸ் 2 தேர்வுகளும், 4 ந்தேதி தேதி பிளஸ் 1 தேர்வுகளும் தொடங்கி நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 26 ஆம் தேதியான இன்று காலை 10 மணிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் இன்று தொடங்கி எதிர் வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 140 மாணவர்களும், 7 ஆயிரத்து 813 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 953 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
5-வினாத்தாள் கட்டு காப்பு மையங்களும், 5- வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள், 5- கூடுதல் வினாத்தாள் கட்டுக்காப்பாளர்களும் என மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக மொத்தம் 66 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 66 தேர்வு மையங்களுங்கும் 66 முதன்மை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுகின்றனர் இதைத் தவிர 66 துறை அலுவலர்களும் 5-கூடுதல் துறை அலுவலர்கள், 13-வழித்தட அலுவலர்கள் இவர்களுக்கு உறுதுணையாக தேர்வுப் பணிகளை கவனிப்பர்கள் எனவும், மேலும் மாணவர்கள் தேர்வுகளில் முறைகேடாக ஈடுபட வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது
மேலும் முறைகேடுகளை கண்காணிக்க 100- பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் இயங்கும் அரசு உதவி பெறும் பாரதிதாசன் பள்ளியில் பத்தாம் வகுப்பு எழுதும் 500 மாணவ மாணவியர்கள் தேர்வறைக்கு செல்வதற்கு முன்பு ஆசிரியர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று அவரின் அறிவுரைகளை கேட்டு தேர்வு அறைக்கு சென்ற செயல் பெற்றோர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

























