கும்பகோணம், மே. 10 –
கும்பகோணம் மாநகருக்குட்பட்ட சௌராஷ்ட்ரா புதுத் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாயாசக்தி அம்மனுக்கு ஆண்டுமோறும் சித்திரைமாதத்தில் வசந்த பாலாபிஷேக திருவிழா நடைப்பெறுவது வழக்கமாகும் இந்நிலையில் இவ்வாண்டு இவ்வாலயத்தின் 81 ஆம் ஆண்டு சித்திரை மாதம் வசந்த பாலாபிஷேக திருவிழா வெகு விமர்சியாக நடைப்பெற்றது. அதனை முன்னிட்டு கடந்த 7ம் தேதி கணபதி ஹோமம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி கஞ்சி வார்த்தல் என தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அதன் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 8 ஆம் தேதி காவிரி ஆற்றிலிருந்து சக்திவேல் சக்தி கரகம் அக்னிசட்டி பால்குடம் புறப்பட்டு இம்மாநகரின் முக்கிய வீதி வழியாக வந்து கோவிலை வந்தடைந்தது.
மேலும் அதன் தொடர்ச்சியாக இன்று ஸ்ரீ பச்சைக்காளி ஸ்ரீ பவளக்காளி படுகளம் காட்சியுடன் வீதி உலாவும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும், எதிர் வருகின்ற 13 ஆம் தேதியன்று அம்பாள் புறப்பாடும், அதனைத்தொடர்ந்து 14 ஆம் தேதியன்று கும்ப பூஜை எனும் அன்னப்பாவாடை நிகழ்ச்சியுடன் இவ்வாண்டிற்கான சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. மேலும் இவ்விழாவின் அனைத்து ஏற்பாடுகளையும் அவ்வாலய விழாக்குழுவினர் மற்றும் தெருவாசிகள் சௌராஷ்டிரா கமிட்டியாளர்கள் என அனைவரும் சேர்ந்து வெகு சிறப்பாக செய்து வருகின்றனர்.






















