காஞ்சிபுரம், மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 1901 ஆண்டு முதல் செயல்பட்டு வந்த முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க வழக்குகள் தீர்வு கண்டு மக்கள் மனதில் நின்ற ஒரு நீதிமன்றமாக செயல்பட்டு வந்தது.
இந்நிலையில் பழமையான அந் நீதிமன்றம் சிதலமடைந்து கட்டிடம் பயன்படுத்தாத சூழ்நிலையில் இருந்து வந்த நிலையில், அவ் வரலாற்று சிறப்பு மிக்க நீதிமன்றத்தை பழமை மாறாமல் அதே பொலிவுடன் சீரமைக்க வேண்டும் என வழக்கறிஞர்களின் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் மீண்டும் புதுப்பித்தனர்.
123 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தோற்றத்தின் படியே புதிய தொழில் நுட்பத்துடன் ஆங்காங்கே தேவையான வசதிகளை செய்து தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
அச்சிறப்பு மிக்க 123 ஆண்டுகள் பழமையான அந் நீதிமன்றத்தின் திறப்பு விழா இன்று நடைப்பெற்றது. புதுப்பிக்கப்பட்ட மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் ரிப்பன் வெட்டி மீண்டும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
அச்சிறப்பு மிக்க விழாவில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன், மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உள்ளிட்ட அந்நீதிமன்ற வழக்கறிஞர் என திரளானவர்கள் பங்கேற்று அவ் விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி செம்மல் இருக்கையில் அமர்ந்து வழக்குப் பணியை தொடர்ந்தார்.