திருவேற்காடு நகராட்சிச் சார்பில் கொரோனா வாரம் விழிப்புணர்வு தொடர் நிகழ்ச்சியை தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நகர வணிகர்களுக்கான விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் நேற்று ஆக 3 அன்று நடைப்பெற்றது.
திருவேற்காடு, ஆக 4 –
செய்திச்சேகரிப்பு ஆனந்த்
திருவேற்காடு நகராட்சியின் சார்பில் கொரோனா விழிப்புணர்வு தொடர் வாரம் மற்றும் நகர வணிகர்கள் உடனான விழிப்புணர்வு ஆலோசனை மற்றும் ஆய்வுக் கூட்டம் நகராட்சி ஆணையர் எம்.ஆர் வசந்தி அவர்களின் ஆலோசனைப் பேரில் நகராட்சியின் கூட்டரங்கில் நேற்று நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் திரளான வணிகர்கள் கலந்துக் கொண்டனர். அவர்களுக்கு கடைகளில் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் குறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் விளக்கமாக விளக்கிக் கூறினார். முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளி கடைப்பிடித்தல், சானிடைசர் வைத்திருத்தல், வெப்ப நிலை மானி தெர்மா மீட்டர் உபயோகப்படுத்த வேண்டும் என்பது போன்ற வழிக்காட்டு நெறிமுறைகள் விளக்கப் பட்டன. மேலும் நகராட்சி சார்பில் கூட்டம் நடைப்பெற்ற இடத்தில் கொரோனா, டெங்கு திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் குறித்தான கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொண்ட வணிகர்கள் பயன் பெறும் வகையில் அவ்விடத்திலயே அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது, இந்நிகழ்ச்சியில் நகராட்சி மேலாளர் முபாராக் பாஷா, மருத்துவர் கௌசல்யா, தூய்மைப் பணி மேற்பார்வையாளர்கள், பரப்புரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்துக் கொண்டனர்.