ஆவடி. மே. 06 –

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 4 அரசு நலத்திட்ட துவக்க விழா நேற்று அப்பகுதியில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில்களில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்  பங்கேற்று நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் அப்பகுதியில் உள்ள அய்யா கோவிலின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழா நிகழ்ச்சியிலும் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவ்விழாவினை சிறப்பித்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தடைப்பெற்ற திருக்கோவில் பொது நிகழ்ச்சி உள்ளிட்ட சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட தொடக்க விழா என ஐந்து விழாக்களில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவ்விழாவினை தொடங்கி வைத்தார்.

அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில்

அதன் படி நேற்று காலை 9 மணியளவில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட திருமுல்லைவாயில் சோழம்பேடு சாலையில் அமைந்துள்ள அய்யா ஸ்ரீமன் நாராயண சுவாமி திருக்கோயில் தருமபதி டிரஸ்ட் சார்பில் அத்திருக்கோயிலின் 25 ஆம் வெள்ளிவிழா ஆண்டினை முன்னிட்டு அக்கோயிலில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 45 உயர ராஜகோபுரம் அன்னதரும கூடம் மற்றும் வடக்கு கோபுரம் ஆகியவற்றிற்கான திறப்பு விழா நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற அமைச்சர் நாசர் ராஜகோபுரம் மற்றும் அன்னதரும கூடத்தினை திறந்து வைத்தார்.

30 வார்டுக்குட்பட்ட பிருந்தாவனம் நகர், ஸ்ரீநகர் காலனி

அதனைத் தொடர்ந்து, அதேப்பகுதியில் உள்ள 30 வார்டுக்குட்பட்ட பிருந்தாவனம் நகர், ஸ்ரீநகர் காலனியில் சுமார் ரூ. 25.60 இலட்சம் மதிப்பீட்டில் 435 மீட்டர் நீளம் 30 அடி அகலத்திலும், புதிய தார்சாலை அமைப்பதற்கான நலத்திட்ட பணியினை தொடங்கி வைத்தார்.

ஏற்கனவே இவ்வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சமீபத்தில் சிமெண்ட் சாலை உள்ளிட்ட 3 சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது என்பதும் காமராஜர் சாலை மற்றும் முருகன் கோயில் அவென்யு ஆகிய பகுதிகளில் புதிய சாலைகள் மிக விரைவில் அமைக்கப்படுள்ளதாக அப்போது 30 வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வம் தெரிவித்தார்.

கோனம்பேடு பகுதி 33 வது வார்டு

அதுப்போன்று, கோனம்பேடு பகுதி 33 வது வார்டில் உள்ள ஆவடி மாநகராட்சி ஆரம்ப நிலைப் பள்ளிக்கு மேலும் கூடுதலாக 2 புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டுவதற்காக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 30 இலட்சம் மதிப்பிலான கட்டுமான பணிகளுக்கான தொடக்க விழாவில் அடிக்கல் எடுத்துக் கொடுத்து அக்கட்டுமான பணியினை அமைச்சர் தொடங்கி வைத்தார். அதுப்போன்று அவ்வார்டிற்குட்பட்ட அன்னணூர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கும் ரூ.40 இலட்சம் மதிப்பிலான நிதி ஒதுக்கப்பட்டு அப்பள்ளியில் புதியதாக மூன்று வகுப்பறைகளும் மற்றும் கழிவறைக் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

காமராஜர் நகர் பிரதான சாலை

அடுத்ததாக ஆவடி மாநகராட்சி அருகேவுள்ள காமராஜர் நகர் பிரதான சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளிக்கு  சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் 45 க்கு 22 அடி அளவிலான புதிய வகுப்பறை கட்டுவதற்கான  கட்டுமான பணியினை அமைச்சர் சா.மு.நாசர் அடிக்கல் எடுத்துக் கொடுத்து தொடங்கிவைத்தார்.

மேலும், அமைச்சர் 15 வார்டுக்குட்பட்ட மருதம் தெருவில் சிமெண்ட் சாலை அமைப்பதற்கான பணியினையும் தொடங்கி வைத்தார். இன்று அமைச்சர் சா.மு.நாசர் இப்பகுதியில் தொடங்கி வைத்த நலத்திட்டங்களின் மதிப்பு சுமார் ரூ 1 கோடியாகும்.

இந்நிகழ்வின் போது ஆவடி மாநராட்சி மேயர் உதயகுமார், ஆவடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் ஆசிம்ராஜா, 2 வது மண்டல குழுத் தலைவர் அமுதா பேபிசேகர், 30 வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வம், 33 வார்டு மாமன்ற உறுப்பினர் ஹரி, 15 வார்டு மாமன்ற உறுப்பினர் அம்மு மாநகராட்சி ஆணையர், நகர உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் அரசு உயர் அலுவலர்கள் மற்றும் திமுக 30 வட்ட து.செயலாளர் முருகன் உள்ளிட்ட திரளானவர்கள் அமைச்சருடன் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here