சென்னை, ஆக. 06 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முகாம் அலுவலகத்தில் இருந்து காணொளிக்காட்சி வாயிலாக திருப்பூரில் நடைப்பெற்று வரும் தமிழ்நாடு மாநில 25 வது மாநாட்டை முன்னிட்டு சமூக நல்லிணக்க பாதுகாப்பு மாநில உரிமைக்ள மீட்பு எழுச்சி மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளார் டி.ராஜா, அக்கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், இந்திய கம்னியூஆஃட் கட்சியின் மாநிலச்செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்ல்லீம் லீக் தேசியத்தலைஐவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன், செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஊஃ, நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ராயன், கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட்-லெனிஸ்ட் ) மாநிலச்செயலாளர் என்.கே.நடராஜன், மற்றும் திமுக வின் தோழமைக் கட்சி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.



















