சென்னை, ஆக. 06 –

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைப்பெற்று வரும் 44 வது சர்வதேச சதுரங்கப்போட்டியின் எட்டவாது நாளான இன்று அப்போட்டியில் பங்கேற்றுள்ள விளையாட்டு விரர்கள் மற்றும் வீரங்கணைகளுக்கான சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

அந்நிகழ்வில் தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துக் கொண்டனர்.

மேலும் இன்று நடைப்பெற்று வரும் எட்டாவது நாள் போட்டியை தலைமைச்செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, பார்வையிட்டார். உடன் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு கதர் கிராமத் தொழில்கள் வாரிய முதன்மைச் செயல் அலுவலர் முனைவர் பொ.சங்கர், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சஞ்சய் கபூர், மற்றும் அரசு உயர் அலுவலர்களும் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here