திருவள்ளூர், மார்ச். 02 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், பாடியநல்லூர் ஊராட்சியில், கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று 526 ஊராட்சிகளைச் சார்ந்த விளையாட்டு வீரர்களுக்கு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் ஊராட்சியில் கலைஞரின் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது அவ்விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டத்தில் 526 ஊராட்சிகளில் உள்ள விளையாட்டு வீர்ர்களுக்கு  33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

மேலும் அவ்விழாவில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பளு தூக்கும் வீரர் தனுஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக சாம்பியன் கார்த்திக் சபரிராஜ் ஆகியோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் கௌரவித்தார்.

தொடர்ந்து அவ்விழாவில் உரைநிகழ்த்திய அமைச்சர் உதயநிதி, விளையாட்டுத்துறை சார்பில் பேச வேண்டிய அனைத்தையும் அமைச்சர் காந்தி அவர்கள் பேசிவிட்டதாகவும், தான் இனி பேசுவதற்கு வேறொன்று இல்லையென விளாயாட்டாக அப்போது குறிப்பிட்டார். மேலும் விளையாட்டுத் துறைக்கு அமைச்சர் நானா அல்லது அமைச்சர் காந்தி அவர்களா என தெரியவில்லை எனவும் அப்போது குறிப்பிட்டார்.

மேலும் கேலோ இந்தியா போட்டியில் 38 தங்கம்,  21 வெள்ளி 30 வெண்கலம் என  98 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது எனவும், விரைவில் முதலிடம் பிடிப்போம் எனவும் அப்போது தெரிவித்தார்.

அவ்விழாவில்  300-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ரு. 14 கோடி மதிப்பிலான ஊக்கதொகை வழங்கப்பட்டது. இந்தியாவில் விளையாட்டு துறை என்றால் தமிழ்நாடு என்ற வகையில் புதுப்புது முயற்சிகளை துறை சார்பில் மேற்கொண்டு வருகிறோம் எனவும் அப்போது அவர் குறிப்பிட்டார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பளு தூக்கும் வீரர் தனுஷ், துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற கார்த்திக் சபரிராஜ் ஆகியோர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் என்பதோடு தானும் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.

விளையாட்டுதுறை நகரங்களோடு தேங்கி விடக்கூடாதெனவும் மேலும் அது கிராமங்களிலும் தொடர வேண்டும் என்பதற்காகதான் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாகவும்,

மேலும் விளையாட்டு வீரனுக்கு தேவையான அனைத்தும் கருணாநிதிக்கு பிறவியிலேயே இருந்தது எனக் குறிப்பிட்டார்.

அதனால்தான் கருணாநிதிக்கு ஷார்ப் மைண்ட் உடன் திகழ்ந்தார். அவருக்கு நிகர் அவரேதான் எனவும் மேலும் அவருக்கு புகழாரம் சூட்டினார். இளம் வயதிலேயே விளையாடியவர் கருணாநிதி எனவும், பிற்காலத்தில் அவர் ஆடுகளத்தில் விளையாடவில்லை என்றாலும், விளையாட்டு வீரருக்கு தேவையான தோல்வியில் துவண்டு விடாமை,  முயற்சி என அனைத்தும் கருணாநிதிக்கு இருந்தது என கலைஞரின் இயல்பு நிலையை எடுத்துரைத்தார். எதிரணி எப்படி விளையாடுவார்கள் என்பதை கணித்து விளையாடுவது, யாராலும் வீழ்த்த முடியாத வீரராக கருணாநிதி வாழ்நாள் முழுவதும் இருந்தார்.

அதனால் தான் விளையாட்டு உபகரணக் கிட்டுக்கு “கலைஞர் SPORTS KIT” என பெயரிப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார். மேலும் மன திடம் இருந்தால் தான் விளையாட்டில் வெற்றி பெற முடியும் எனவும்,  யாராலும் எப்போதும் வீழ்த்த முடியாதவர் கருணாநிதி எனவும் தெரிவித்த அவர், நீண்ட தூரம் ஓடினால்தான் அதிக உயரம் தாண்ட முடியும் என கருணாநிதி அவரிடம் கூறியதை அம்மேடையில் நினைவு கூர்ந்தார்.

அச்சிறப்பு மிகுந்த அவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிரபுசங்கர், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், கிருஷ்ணசாமி,  டி.ஜெ.கோவிந்தராஜன்,  துரை சந்திரசேகர்,  முன்னாள் அமைச்சர் ஆவடி நாசர்,  உள்ளிட்ட பலர் பங்கேற்று அவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர் எனலாம்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here