திருவள்ளூர், ஜூன். 07 –

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளி காமராஜர் துறைமுகம் நுழைவுவாயில் முன்பு சிஐடியு தொழிலாளர்களின் அமைப்பு சார்பில் இந்தியன் ஆயில் எல்என்ஜி நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் கே எஸ் விஜயன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் ஜி விநாயகமூர்த்தி. மாவட்ட இணை செயலாளர் நரேஷ்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில் தனியார் நிறுவனமும் மத்திய அரசும் இணைந்து இந்தியன் ஆயில் எல்என்ஜி என்ற நிறுவனம் துறைமுகத்தில் 60 ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு  செயல்பட்டு வருகிறது. கப்பல்களின் மூலம் கொண்டுவரும்  பெட்ரோலிய எரிவாயுவை குழாய்களின் மூலம் சேமித்து லாரிகளில் வழியாக பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு ஊதிய உயர்வு கேட்டு பலமுறை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்த முற்பட்டு எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் போராட்டத்தை தொடர்ந்ததாகவும் தெரிவித்தனர். மேலும் நாள் கடத்தும் நிலையில் பணிநிறுத்தம் செய்யப்போவதாக தெரிவித்தனர். இதனைக் கண்டிக்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றதாக தொழிலாளர் அமைப்பு சார்பில் தெரிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here