பழவேற்காடு, செப். 05 –

திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் வடக்கு ஒன்றியம், பழவேற்காடு பகுதியில் இன்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி பாஜகவின் மாவட்ட தலைவர் வி.சரவணன் தலைமையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

முன்னதாக அறிமுக கூட்டம் நடைப்பெற்றது. அதில் பாஜகவின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் செயல்பாடுகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. குறிப்பாக பழவேற்காடு பகுதியில் உள்ள  மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சாட்டான் குப்பம் ஏ.மணி தலைமையில் புதிதாக கட்சியில் இணைய கூடிய அனைத்து உறுப்பினர்களையும், இக் கூட்டத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

மேலும் புதிதாக கட்சியில் இணைந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்பு மற்றும் வாழ்த்துக்களை அக்கட்சியினர் அளித்தனர். திருவள்ளூர் கிழக்கு மாவட்ட மீனவர் பிரிவு தலைவர் பசியாவரம் சுப்பிரமணி முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் சிவராஜ், பொருளாளர் சங்கர் குமார், மாவட்ட செயலாளர் பரந்தாமன், மாவட்டத் துணைத் தலைவர் திவாகரன், விருந்தோம்பல் மாவட்ட பிரிவு தலைவர் வெங்கடசுப்பிரமணியம், பிரச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் வினோத், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார், பொதுச் செயலாளர் எம்.முத்து, பொன்னேரி நகர தலைவர் எம்.பி.மோகன், செயற்குழு உறுப்பினர் நாகமணி, மாவட்டச் செயலாளர் விஜயா மற்றும் ஜானகி, இளைஞர் அணி துணைத் தலைவர் சீனிவாசன், மீஞ்சூர் வடக்கு ஒன்றிய மீனவர் பிரிவு தலைவர் எஸ் முத்து,மீஞ்சூர் வடக்கு ஒன்றிய துணைத் தலைவர் சந்திரமோகன் பெருமாள். ஆகியோர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தனர். இதில் பாஜக நிர்வாகிகள் ஆறுமுகம், சிவா, ஜெயபால், முக்தா, ராஜேந்திரன், சவுரி கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here