சென்னை, மே. 10 –
தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படம் திறப்பு விழாவினை முன்னிட்டு விழா சிறப்பு மலரை இன்று சட்டப்பேரவையில் நடைப்பெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அதனை சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது, நீர்வளத்துறை அமைச்சரும் அவை முன்னவருமான துரைமுருகன், பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்கள், சட்டமன்றப் பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி, அரசு கொறடா முனைவர் கோவி.செழியன், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் மற்றும் பல அரசு அலுவலர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.






















