ராமநாதபுரம்: ராமநாதபுரம் தாலுகா அலுவலகததில் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் போதிய பணியாளர்கள் இல்லாத காரணத்தால் முதியோர் ஓய்வூதியம் வழங்குவதில் இழுபறிநிலை நீடிக்கிறது. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தின் வாயிலாக முதியோர் ஓய்வூதியம், மாற்றுத்தினாளிகள் உதவி தொகை, விதவை பெண்கள் உதவி தொகை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வந்தன. சமீப காலமாக இந்த அலுவலகத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தாங்கள் தொடர்ந்து வாங்கி வந்த உதவி தொகை கிடைக்கவில்லை என புகார் மேல் புகார்களை வைத்தும் சரியான நடவடிக்கை இல்லை. காரணம் சமூக பாதுகாப்பு திட்டம் அலுவலகத்தில் போதிய பணியாளர்கள் இல்லாததால் மாதாந்திர உதவி தொகை வழங்கும் பணி அப்படியே கிடப்பில் கிடப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் மாதாந்திர உதவி தொகையை நம்பி வாழும் வயோதிகர்கள் மற்றும் விதவை பெண்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீராகவ ராவ் நேரடியாக ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று அதிரடி நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ராமநாதபுரம் தலைமை இடத்தில் இதுபோன்ற மந்தநிலை காரணமாக முதியோர் அவதிப்படுவது இன்னும் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்பதையே காட்டுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு முதியோர் பயன்பெறும் வகையில் உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் ராமநாதபுரத்தில் முதியோர் ஓய்வூதியம் பெற முடியாமல் அவதி , சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தில் அலுவலர்கள்...