திருவண்ணாமலை. டிச.3-

திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் மேற்பார்வையில் அடிப்படை வசதிகளை செய்துத் தரும் பணி படு மும்முரமாக நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 27ந் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று பஞ்ச மூர்த்திகள் தேரோட்டம் நடைபெறுகிறது. இதைக் காண சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் கிரிவலத்திற்காக வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

கிரிவல பாதையின் தொடக்கத்தில் உள்ள ஆணாய்பிறந்தான் ஊராட்சியில் பக்தர்களுக்கான ஓய்வு அறை, கழிவறை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரும் பணியும், துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மை செய்யும் பணியும் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை அப்பகுதி பொறுப்பாளர்களும், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுமான கே.பி. மகாதேவன் (தண்டராம்பட்டு), பி.பி.முருகன் (புதுப்பாளையம்) ஆகியோர் பார்வையிட்டனர். உடன் ஆணாய் பிறந்தான் ஊராட்சி மன்ற தலைவர் கே.தருமராஜ் பங்கேற்றார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here