தஞ்சாவூர், ஏப். 27 –

.தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ளது களிமேடு கிராமம். இங்குள்ள அப்பர் சுவாமி கோவில் தேர் திருவிழா வருடந்தோறும் சித்திரை மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த தேர் திருவிழாவானது நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி விடிய விடிய நடைபெறும் வழக்கம் போல் இந்த ஆண்டும் திருவிழா தொடங்கியது.

இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கரிக்கப்பட்ட சப்பரம் போன்ற தேரில் மக்கள் அதனை ஊர்வலமாக எடுத்துச் செல்வார்கள் .அதேபோல நேற்று இரவு 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேர் வீதி உலா தொடங்கியது. களிமேடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.

தேரில் மின் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை 3 மணி அளவில் தேரை இழுத்துச் சென்ற போது ஓரிடத்தில் உயரழுத்த மின்கம்பியில் தேரின் உச்சி பகுதி உரசியது. இதனால் தேரில் மின்சாரம் பாய்ந்து தேர் முழுவதுமாக எரிந்தது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பற்றிய விவரம் தற்போது கிடைத்துள்ளது. கோவில் பூசாரி செல்வம், ராஜ்குமார், மோகன், பிரதாப், சுவாமிநாதன் பரணிதரன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் பெயர் வரும் சேகரிக்கப்பட்டு வருகிறது.

இறந்த பூசாரி செல்வம் தேர் திருவிழாவின் முக்கிய நபர் ஆவார். இதேபோல் பிரதாப் என்பவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரும் திருவிழாவை முன்நின்று நடத்தியவர் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இவர்கள் தவிர காயமடைந்த சுமார் 16 பேர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் அவர்களை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஒன்றிய செயலாளர்கள் துரைவேல் சாமிவேல் கலியமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பாதிக்கப்பட்டவர்ளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். .

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here