திருவிடைமருதூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ….
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள புளியம்பேட்டையை சேர்ந்த உதயசந்திரன், 33, வேம்பு 27, ஆகிய தம்பதியனர். கடந்த பிப்.18 ஆம் தேதி, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள், தங்கள் வீட்டில் பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்து தங்கள் இருவரையும், கத்தியை காட்டி மிரட்டி தங்களிடம் இருந்து, 15 சவரன் நகை, இரண்டு குத்து விளக்கு, ஐ போன் மொபைல் போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். என வேம்பு திருவிடைமருதுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அப் புகாரின் பேரில், திருவிடைமருதுார் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் தலைமையிலான தனிப்பிரிவு காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜா, தலைமையில் காவலர் விக்கி, மற்றும் காவல்துறையினர் கொள்ளையர்களைத் தேடி வந்தனர்.
மேலும், வேம்பு மொபைல் எண் மற்றும் கொள்ளையர்கள் பயன்படுத்திய கார் நம்பர் கொண்டு ஆய்வு செய்தனர். அப்போது அந்த எண்ணில் இருந்து, தஞ்சாவூர் பர்மா காலனி பகுதியை சேர்ந்த வித்யா என்பவரிடம் கொள்ளையர்கள் தொடர்பு கொண்டு பேசி இருந்தது. போலீசாரின் ஆய்வில் தெரியவந்தது.
அதனைத்தொடர்ந்து, வித்யாவை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வித்யா, வேம்பு இருவரும் சேர்ந்து, பாலியல் தொழிலில் ஈடுபட்டு வருவதும், அதற்காக வாட்ஸ் அப் குழு ஒன்றை உருவாக்கி, தமிழகம் முழுவதும் பலரை வைத்து தொழில் செய்து வந்தது போலீசாரின் தீவிர விசாரணையில் தெரிந்தது. மேலும் அந்தக் குழுவிற்கு அட்மினாக வித்யாவும், வேம்புவும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஒருவர் வித்யா மூலம், வேம்புவை கொடைக்கானலில் உள்ள சொகுசு விடுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது அந்த நபரிடம் பணம் பறிக்க திட்டமிட்ட வேம்பு தனது கணவன் உதயசந்திரனை சொகுசு விடுதிக்கு வரவழைத்து, தன்னுடன் அந்த நபர் உல்லாசமாக இருப்பதே வீடியோ எடுக்க வைத்து, அவரை மிரட்டி 8 லட்சம் ரூபாய் பணத்தை வேம்பு பெற்றுள்ளார்.
இது தொடர்பாக வித்யாவிடம் அந்த நபர் தகவலைத் தெரிவித்துள்ளார். பின்னர் வித்யா அந்த வீடியோவை ஒப்படைக்க வேம்புவிடம் கூறியுள்ளார். ஆனால், வேம்பு அந்த வீடியோவை ஒப்படைக்க மறுத்துள்ளார்.
இதையடுத்து வித்யா தஞ்சாவூர் பர்மா காலனியை சேர்ந்த தனது பகுதியை சேர்ந்த பாலகுரு, கோபிநாத், முரளிதரன், முத்துகிருஷ்ணன், பிரபாகரன், ஆகாஷ், விஷ்வா, அருண் எட்டு பேரை வைத்து, வேம்பு வீட்டிற்கு சென்று பணத்தை கொள்ளையடித்தது தெரிய வந்தது.
இது தொடர்பாக வித்யாவை கைது செய்த காவல்துறையினர், அவர் அளித்த வாக்குமூலத்தின் பேரில், எட்டு பேரையும் நேற்று கைது செய்தனர். மேலும், அத்தகவலறிந்து தலைமறைவான வேம்பு அவரது கணவர் உதயசந்திரனை கைது செய்து, 11 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.