சென்னை, மார்ச். 03 –
தமிழகத்தில் நடைப்பெற்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிப் பெற்ற திமுக நகராட்சி உறுப்பினர்களாக வெற்றிப் பெற்ற நபர்கள், மாநகராட்சி மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் என அனைவரும் நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர்.
இந்நிலையில் நாளை மார்ச் 4 ஆம் தேதி மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி மேயர், துணை மேயர், நகர மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறை முகத்தேர்வு நடைப்பெறும் கூட்டம் நடைப்பெறுகிறது.
இந்நிலையில் திமுக தலைமை சார்பில் நகராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கான மறைமுகத்தேர்வில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
அதன்படி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள பொன்னேரி நகராட்சி தலைவருக்கான பதவிக்கு போட்டியிட டாக்டர் பரிமளம், திருவள்ளூர் மத்திய மாவட்டத்தில் உள்ள பூவிருந்தவல்லி நகராட்சிக்கு காஞ்சனா சுதாகர், திருவேற்காடு நகராட்சிக்கு இ.கிருஷ்ணமூர்த்தி, திருநின்றவூர் நகராட்சிக்கு உஷாராணி, ஆகியோரும், அதுப்போன்று திருவள்ளூர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள திருவள்ளூர் நகராட்சி தலைவர் பதவிக்கு உதயமலர் பாண்டியன், திருத்தணி நகராட்சிக்கு சரஸ்வதி பூபதி ஆகியோரை திமுக தலைமை அறிவித்துள்ளது.




















