அம்பத்தூர், மார்ச். 30 –

சென்னை அம்பத்தூரில் அமைந்துள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் போக்குவரத்து துறையை சேர்ந்த உயரதிகாரிகள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினைப் பற்றி எடுத்துரைத்தனர். மேலும் அவர்கள் மாணவ மாணவிகளுக்கு வாகனம் ஓட்டுவதற்கு தேவையான அறிவுரைகள் மற்றும் வழிமுறைகளையும் தெரிவித்தனர்.

பின்பு தலைக்கவசம் அணிவதன் அவசியம் அதனால் ஏற்படும் உயிர் பாதுக்காப்பு பற்றியும், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் விபரீதத்தையும் தெளிவுபடுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் கலந்துக் கொண்டு மாணவ-மாணவிகளிடையே சிறப்புரையாற்றிய பிறகு, மாணவ மாணவிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுப் போட்டி, ஓவியப்போட்டி மற்றும் சாலை பாதுகாப்பு வாசக போட்டிகளில்  வெற்றி பெற்றவர்களுக்கு கேடயம் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.

போக்குவரத்து வட்டார அலுவலர் அசோக் குமார், போக்குவரத்து வாகன ஆய்வாளர் ரமேஷ், அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி மைய கூடுதல் இயக்குநர் செந்தில்குமார், நேர்முக உதவியாளர் விஸ்வநாதன் மற்றும் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here