ஆவடி, மார்ச். 30 –
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ஆவடி மாநகராட்சி பகுதியில் உள்ள பருத்திப்பட்டில் இந்து முன்னணி நிர்வாகிகள் ரமேஷ், சிவா ஆகியோரது ஏற்பாட்டில், கோடைகாலம் முழுவதும் தினந்தோறும் பொதுமக்களுக்கு இலவசமாக கூழ் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந் நிகழ்ச்சியில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி செயலாளர் ஆவடி லயன் டாக்டர் எஸ்.கே.எஸ். மூர்த்தி கலந்துக் கொண்டு துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நீர் மோர் மற்றும் கூழ் அருந்தி பலன் பெற்றனர்.





















